சுடச்சுட

  

  குடியிருப்புப் பகுதியில் கழிவு நீரை விட முயற்சி: கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

  By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடியிருப்பு பகுதியில் கழிவு நீரை விட மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
   நாமக்கல் மாவட்டம், மோகனூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
   மோகனூர் அருகே ராசிபாளையம் கிராமத்தில், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் குடியிருந்து வருகின்றோம். மோகனூர் ரயில் நிலையம் அருகே இந்திரா நகர், சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஓடை வெட்டி, குடியிருப்பு வழியாக ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் மோகனூர் பேரூராட்சி, ராசிபாளையம் ஊராட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் அளித்துள்ளனர். இந்த நிலையில், இந்திரா நகரில் தனியார் சிலர், பிளாஸ்டிக் குழாய் பதித்து கழிவுநீரை ராசிபாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விட முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
   அவ்வாறு கழிவுநீர் குடியிருப்புப் பகுதியில் வெளியேற்றும் பட்சத்தில், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai