சுடச்சுட

  

  கூலி வழங்க கால தாமதம்: ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் புகார்

  By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   கூலி வழங்க கால தாமதம் செய்வதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
   நாமக்கல் மாவட்டம், பெரியமணலி ஊராட்சிக்குள்பட்ட குஞ்சாம்பாளையம், பெரியமணலி, ஜேடர்பாளையம், கிழக்குக்காடு, பலாக்காரன்காடு, பாலக்காடு, அத்திக்காடு, சத்யாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக கூலி வழங்கவில்லை.
   இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், எலச்சிப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சென்று முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை எனக் கூறப்படுகிறது.
   இந்த நிலையில், இந்தக் கிராமங்களைச் சேர்ந்த ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் 150 பேர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
   அந்த மனு விவரம்: ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களில் 70 பேருக்கு மட்டும் கடந்த மார்ச் மாதம் வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதுவரை வழங்காமல் நிலுவை உள்ளது. முறைப்படி நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிலுவைத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai