சுடச்சுட

  

  தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

  By பரமத்திவேலூர்  |   Published on : 13th September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்தனர்.
   பரமத்தி வேலூரில் கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் விசர்ஜன ஊர்வலம், பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பரமத்தி வேலூர் தலைமைக் காவலர் முருகேசன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
   இவர், ஊர்வலத்தில் கலந்து கொண்ட வெங்கரையைச் சேர்ந்த பெரியசாமி மகன் லோகநாதனிடம் (29) வரிசையில் செல்லும்படியும், விரைவாக செல்லும்படியும் கூறியுள்ளார். இதில் ஆவேசமடைந்த லோகநாதன், காவலர் முருகேசனிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தலைமைக் காவலருக்குக் கொலை மிரட்டு விடுத்துள்ளாராம். இது குறித்து தலைமைக் காவலர் முருகேசன், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், லோகநாதனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai