சுடச்சுட

  

  போதமலை கீழூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

  By நாமக்கல்  |   Published on : 13th September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாததால் பதவி விலகுவதாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 பேர் மனு அளித்தனர்.
   நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே போதமலை கீழூர் ஊராட்சி 3-ஆவது வார்டு உறுப்பினர் கே.சி.கனகராஜ், 6-ஆவது வார்டு உறுப்பினர் டி.குப்புசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
   இதுவரை எந்த அடிப்படை வசதியும் எங்கள் வார்டுகளுக்கு செய்து தரவில்லை. குடிநீர் பிரச்னை நிலவுவதால், பெண்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
   சில மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட வேண்டி உள்ளது. கல்லாங்குளம், இடப்பெருமாள் கோயில், ஐயம்பாளையம் வழிகளில் முட்செடிகள் வெட்டப்படாததால், அவ்வழியாக பொருள்களை தலைச் சுமையாக எடுத்துச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   இந்தக் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியாததால், வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai