சுடச்சுட

    

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ரூ. 22 லட்சம் நலத்திட்ட உதவி

    By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
     மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, குடிசை மாற்று வாரியத்தில் வீடு, புதிய குடும்ப அட்டை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 721 மனுக்கள் வரப்பெற்றன.
     இந்த மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
     கூட்டத்தில் குமரவேலிபாளையத்தைச் சேர்ந்த வீ.சந்தியா, சிங்ளாந்தபுரத்தைச் சேர்ந்த மு.புஷ்பாதேவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் படிப்பைத் தொடர அரசு உதவ வேண்டும் என ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனர். இந்தக் கோரிக்கை மனுவை ஏற்று இருவருக்கும் தாட்கோ மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை மாணவிகளிடம் ஆட்சியர் வழங்கினார்.
     மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 91 பயனாளிகளுக்கு ரூ.22. 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட வழங்கல், நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.ராமகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, கலால் உதவி ஆணையர் இ.புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai