சுடச்சுட

    

    பள்ளிபாளையம் அருகே மூதாட்டியை கத்தி முனையில் மிரட்டி 11 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
     பள்ளிபாளையம் ஜீவா செட் பின்புறத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (83). அவர் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வீட்டருகே பால் வாங்கச் சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி ஜானகியை (74), மர்மநபர்கள் கத்தி முனையில் மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடி, 2 பவுன் வளையல்களை பறித்துச் சென்றனர்.
     இதுகுறித்து பழனியப்பன் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai