சுடச்சுட

  

  நாமக்கல் அருகே 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினர்.
   நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி புதூரைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும் அங்குள்ள கோயிலில் புதன்கிழமை (செப்.14) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
   தகவல் அறிந்து திங்கள்கிழமை இரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்ற வருவாய், காவல், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சைல்டு லைன் ஊழியர்கள் அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.
   இதையடுத்து சிறுமியை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமம் முன் புதன்கிழமை நேர் நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai