சுடச்சுட

    

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கத்திக் குத்து: தொழிலாளி கைது

    By குமாரபாளையம்  |   Published on : 14th September 2016 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய தொழிலாளியைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     குமாரபாளையம் அருகே கே.ஓ.என். திரையரங்கு பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவரது மனைவி நிர்மலா (40). மீன்பிடித் தொழில் செய்து வரும் ஆறுமுகம், அதிகாலை நேரத்திலேயே காவிரி ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவர்களின் வீட்டுக் கதவை மர்ம நபர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.
     இதனால், மறைந்திருந்து பார்த்தபோது அதே பகுதியில் வசிக்கும் நிர்மலாவின் தங்கை விஜயாவின் கணவர் குமார் (38) கதவைத் தட்டிச் சென்றது தெரிந்தது. இதனால், ஆறுமுகம், நிர்மலா, இவர்களின் மகன் மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து குமாரைத் தட்டிக் கேட்டனர். இதனால், ஆவேசமடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியால் தாக்கியதில் ஆறுமுகம் உள்பட நால்வர் பலத்த காயமடைந்தனர்.
     குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் போலீஸில் புகார் செய்தனர்.
     இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai