சுடச்சுட

    

    வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் குதித்து விளையாடியபோது தவறி விழுந்ததில் 8-ஆம் வகுப்பு மாணவர் இறந்தார்.
     கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ. இவர், குடும்பத்துடன் வேலகவுண்டம்பட்டி அருகே நாயக்கடிப்புதூரில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் (13). இவர் வேலகவுண்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர், தனது நண்பர்களுடன் வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது மேலிருந்து கிணற்றுக்குள் குதித்தபோது கிணற்றின் ஓரத்திலிருந்த இரும்பு கம்பி குத்தியதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai