சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 14th September 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், அண்ணாநகர் அருகே 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக ஒருவரை பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

     பரமத்தி வேலூர் வட்டம், அண்ணா நகர் அருகே நெட்டையாம்பாளையத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதன் மகன் கோபால் (42) பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை மளிகைக் கடைக்குச் சென்ற நெட்டையாம்பாளையத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவியைக் கட்டாயப்படுத்தி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றார்.
     இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் தாய் இதுகுறித்து பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் மாணவியை மீட்டு கோபாலை கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai