Enable Javscript for better performance
தமிழர்கள் மீது வன்முறை: கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழர்கள் மீது வன்முறை: கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 14th September 2016 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னையில் தமிழர்கள், தமிழக வாகனங்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் கலவரம் வெடித்துள்ளது. தமிழர்கள், தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
     இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தலைமை வகித்தார். தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி, செயலர் அருள், கொமதேக மாவட்டச் செயலர் ஆர்.மாதேஸ்வரன், துணைச் செயலர் ரவிச்சந்திரன், வணிகர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி, நகர வர்த்தகர் சங்கத் தலைவர் முத்துசாமி, மஞ்சள் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வாசு சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதில், செல்ல.ராசாமணி பேசியது:
     உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை தராமல் கர்நாடக அரசு காட்டாட்சி நடத்தி வருகிறது.
     இதுவரை பேருந்து, லாரிகள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரித்தும், அடித்து நொறுக்கியும், சேதப்படுத்தி உள்ளனர். அதன் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
     தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கை கன்னட அமைப்பினர் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழர்களுக்கும், தமிழக வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டும்.
     உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தத் தவறிய, கர்நாடக அரசைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்.
     தமிழர்கள் மீதான வன்முறையை கன்னட வெறியர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் எந்த சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai