Enable Javscript for better performance
நாமக்கல்லில் பக்ரீத் சிறப்புத் தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளி வாசல் சார்பில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     காலை 8 மணிக்கு நடைபெற்ற தொழுகையை பள்ளி வாசல் இமாம் சாதிக் அஷ்ரத் நடத்தினார். பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக் நவீத் முன்னிலை வகித்தார். இதில் பள்ளிவாசல் செயலர் ரபீக், துணைத் தலைவர் முப்தி செரீப்கான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர்.
     மேலும் காஷ்மீர், கர்நாடக பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையின்போது இஸ்லாமியர்கள் கட்டித் தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதுபோல, நாமக்கல் நகரில் உள்ள பல்வேறு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai