Enable Javscript for better performance
ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

    By நாமக்கல்,  |   Published on : 14th September 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரம் தொடர்பாக பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலம் வழியாகச் செல்லும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட போராட்டங்களில் கலவரக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆதவன் தலைமை வகித்தார். அப்போது கர்நாடக மாநிலத்தாரைக் கண்டித்தும், தமிழகத்தைச் சேர்ந்தோர் மீது தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai