சுடச்சுட

  

  ரூ. 43 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சர் வி.சரோஜா தொடங்கி வைத்தார்

  By ராசிபுரம்,  |   Published on : 14th September 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊத்துபுளிக்காடு, தாண்டாக்கவுண்டன்புதூர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, ராசிபுரம், குருக்கபுரம் மற்றும் ஓ.செüதாபுரம் ஆகிய பகுதிகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   விழாக்களுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தலைமை வகித்தார்.
   சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 5 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, 76 பயனாளிகளுக்கு ரூ.19,29,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
   விழாவில் ஓ.செüதாபுரம் ஊராட்சித் தலைவர் எஸ்.ரஞ்சித்குமார் வரவேற்றார். சேலம் ஆவின் பொதுமேலாளர் கே.சாந்தி, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், ராசிபுரம் வட்டாட்சியர் சந்திரமாதவன், சேலம் ஆவின் தலைவர் ஆர்.சின்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஈ.கே.பொன்னுசாமி, தமிழ்ச்செல்வி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai