சுடச்சுட

    

    வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு ஆய்வு

    By நாமக்கல்,  |   Published on : 14th September 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
     வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி இந்த அங்கீகாரக் குழுவுக்கு சுயவிவர அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
     அதன்பேரில் குழுத் தலைவர் பேராசிரியர் கே.சிதானந்த கெüடா, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.டீ. பிடே, உறுப்பினர் முனைவர் வி.பி.ஜகதி ராஜ் ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவினர் கல்லூரிக்குச் சென்று அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்தனர்.
     மேலும் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத அனைத்துப் பணியாளர்கள், மாணவ, மாணவியர், முன்னாள் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆகியோரிடம் கல்லூரி குறித்த விவரங்களைக் கலந்துரையாடல் மூலம் ஆய்வு செய்தனர்.
     இக்குழுவினர் ஆய்வறிக்கையை பின்னர் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai