சுடச்சுட

    

     நாமக்கல் அருகே இளம் வயது திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஆண்டித் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம் சின்னக்கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (22) என்பவருக்கும் அங்குள்ள கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
     தகவல் அறிந்து புதன்கிழமை சிறுமியின் வீட்டுக்குச் சென்ற வருவாய், காவல், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சைல்டு லைன் ஊழியர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர். மேலும் சிறுமியை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமம் முன் வியாழக்கிழமை காலை நேர்நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai