சுடச்சுட

    

    கர்நாடக வன்முறையைக் கண்டித்து நாளை கடையடைப்பு: சவரத் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு

    By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் வன்முறையைத் தடுக்காத கர்நாடக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ள கடையடைப்புக்கு நாமக்கல் மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.மகேஷ்வரன், செயலர் சி.அன்பழகன், பொருளர் பி.வேலுச்சாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகப் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிப்பு, தமிழர்கள் மீது தாக்குதல் என வன்முறைச் சம்பவங்களில் கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
     கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழர்கள் மீதான வன்முறையைத் தடுக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
     இதற்கு நாமக்கல் மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முழுஆதரவு தெரிவிக்கும் வகையில், நகரில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai