சுடச்சுட

    

    காவிரி பிரச்னை: பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் விலை சரிவு

    By பரமத்திவேலூர்,  |   Published on : 15th September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் வெல்ல ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு காவிரி பிரச்னையால் அதிக அளவில் வியாபாரிகள் வராததால் வெல்லம் விலை சரிவடைந்தது.
     பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்து வந்தனர்.
     கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ரூ.1,300-க்கும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு வெல்லம் ரூ.1,180-க்கும், அச்சு வெல்லம் ரூ.1,250-க்கும் ஏலம் போனது. வெளி மாநிலங்களுக்கு வெல்லங்களை வாங்கி அனுப்பும் வியாபாரிகள் லாரிகள் மூலம் கர்நாடக மாநிலத்தை கடந்து அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வெல்ல சந்தைக்கு வராததால் அச்சு மற்றும் குண்டு வெல்லத்தின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai