சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பேக்கரி மீது கல்வீசி தாக்குதல்

    By குமாரபாளையம்,  |   Published on : 15th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த பேக்கரி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதில், பேக்கரியின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
     குமாரபாளையம்-சேலம் சாலையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு சிக்மங்களூரைச் சேர்ந்த விஸ்வநாத் மற்றும் சிலர் சேர்ந்து பேக்கரி மற்றும் இனிப்பகத்தை நடத்தி வருகின்றனர். காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஏற்கெனவே கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கடைக்கு சில நாள்கள் விடுமுறை அளிக்குமாறும் தெரிவித்திருந்தனராம்.
     ஆனால், புதன்கிழமை காலை வழக்கம்போல் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வந்தனராம். இந்நிலையில், புதன்கிழமை இரவு 3 பேர் கொண்ட கும்பல், சராமாரியாக கடைக்குள் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டது. கல்வீச்சில் கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, கேக் மற்றும் இனிப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்காரக் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
     இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூடுவதையறிந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். சம்பவ இடத்தில் குமாரபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai