சுடச்சுட

  

  கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க வலியுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொலை, திருட்டு, குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலத்தவரை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் கட்டடம், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
   இந்நிலையில், இப் பகுதிகளில் கொலை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மொளசி காவல் நிலையப் பகுதியில் தனியாக இருந்த விதவைப் பெண் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டார். இதேபோல், கொக்கராயன்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து பெண்களைக் கட்டிப்போட்டு 50 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பள்ளிபாளையயம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
   பொதுமக்களை அச்சமடையும் வகையில் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்து வந்தாலும், இந்த குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேசமயம் இந்த செயல்களில் வட மாநிலத்தவர் ஈடுபட வாய்ப்புள்ளதாக போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
   இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் டி.தங்கவேல் கூறியது, இங்கு ஆள்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநிலத்தவர்களை வேலைக்கு பயன்படுத்துகின்றனர். இவர்கள் யார் எந்த ஊர் எனறு கூட தெரியவில்லை. ஊரில் எங்காவது திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால் இவர்களை விசாரிக்க முடியாது. அதனால், போலீஸார் முழு விவரத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
   திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதே போன்று நாமக்கல் மாவட்டத்திலும் போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai