சுடச்சுட

    

    செப்.17-ல் நாமக்கல் கம்பன் கழக விருது வழங்கும் விழா

    By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
     சேலம் சாலை சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். டாக்டர் பி.செல்வராஜ், ராம.சீனிவாசன், டி.சந்திரசேகரன் முன்னிலை வகிக்கின்றனர். நாமக்கல் கம்பன் கழகச் செயலர் அரசு பரமேசுவரன் வரவேற்கிறார்.
     திருச்சியைச் சேர்ந்த டாக்டர் அ.அறிவொளிக்கு கம்பர் விருதும், நாமக்கலைச் சேர்ந்த தா.ஜெயராமுலுவுக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது. பொதிகை தொலைக்காட்சி இயக்குநர் பால.ரமணி சிறப்புரையாற்றுகிறார்.
     5 பேருக்கு துறைசார் வல்லுநர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, இயற்கை விவசாயம் விருது மோகனூர் அஜீத் அய்யர், சமூக ஆர்வலர் விருது திருச்செங்கோடு மு.வஜ்ரவேலு, மனிதநேய மக்கள் மருத்துவர் விருது நாமக்கல் டாக்டர் க.கோகுலக்கண்ணன், நல்லாசிரியர் விருது மேலப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கா.இளங்கோ, நம்பிக்கை நாயகன் விருது சிங்கப்பூர் மதி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
     18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு "கம்பர் காவியத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்துவதில் முன்னிற்பது அரசியலே, அறவியலே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
     முனைவர் வாணியம்பாடி அப்துல் காதரை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில் "அரசியலே' என்ற தலைப்பில் சோ.ராமகிருஷ்ணன், ரெ.ராஜ்குமார், ரா.தெய்வநாயகி, "அறவியலே' என்ற தலைப்பில் பேராசிரியர் ஆத்தூர் சுந்தரம், முனைவர் க.முருகேசன், புலவர் சித்ரா சுப்ரமணியம் ஆகியோர் பேசுகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai