சுடச்சுட

    

    நாளை கடையடைப்பு போராட்டம்: மணல் லாரி உரிமையாளர்கள் ஆதரவு

    By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள், தமிழக வாகனங்களுக்கு நிகழ்த்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய மற்றும் வணிக அமைப்புகள் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அன்று மணல் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
     இதுகுறித்து சங்கத் தலைவர் கே.ராஜசேகர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக தமிழர்கள் உயிருக்கு அச்சப்பட்டு வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த லாரிகள், பேருந்துகளை கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீயிட்டு சேதப்படுத்தியும், லாரி ஓட்டுநர்களை அடித்து துன்புறுத்தியும் வருகின்றனர்.
     இந்த வன்முறை நிகழ்வுகளால் தமிழகத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புக்கு கர்நாடக மாநில அரசு பொறுப்பேற்று வாகனங்களுக்கும், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட பொருள்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அங்குள்ள தமிழக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
     கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கும் வகையில், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் ஆதரவு அளிக்கிறது. அன்று மணல் லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai