Enable Javscript for better performance
பரமத்தி அருகே தேங்காய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி அருகே தேங்காய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 15th September 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தேங்காய் ஏற்றிச் சென்ற லாரி நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியின் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
     பொள்ளாச்சியில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு தேங்காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம் திருமணிமுத்தாறு பாலம் அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
     இதில், லாரியின் ஓட்டுநர் ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் (32) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai