சுடச்சுட

  

  பா.ஜ.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு: இன்று தொடக்கம்

  By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் வியாழக்கிழமை (செப்.15) முதல் பெறப்படுகிறது.
   இதுகுறித்து மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் உள்ளாட்சித் தேர்லில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்கள் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பெறப்படும்.
   அதன்படி, 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நாமக்கல் நகர அலுவலகத்திலும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பரமத்திவேலூர், மாலை 6 மணிக்கு பெரியமணலி, 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திருச்செங்கோடு, மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை குமாரபாளையம், மாலை 6 மணிக்கு பள்ளிபாளையத்திலும் விருப்ப மனு பெறப்படும்.
   18-ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை வெண்ணந்தூர், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ராசிபுரம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை நாமகிரிப்பேட்டை, மாலை 6.30 மணிக்கு சேந்தமங்கலத்திலும் விருப்ப மனுக்கள் பெறப்படும். விடுபட்ட பகுதிகளுக்கு 19-ஆம் தேதி நாமக்கல் நகர அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படும்.
   மேலும் விவரங்களுக்கு தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை செல்லிடப்பேசியில் தொடர்புகொள்ளலாம். உறுப்பினர்கள் பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண் விவரம், என்.சத்தியமூர்த்தி-9789455378, சி.செங்கோடன்-9047124367, சி.கே.பழனியப்பன்-9443335244, கே.ராஜமாணிக்கம்-9442175425, ஆர்.காந்தி-9443255165.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai