Enable Javscript for better performance
பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

    By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி, இ-போஸ்ட் மூலம் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     இதுகுறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வி.முத்துராஜ் வெளியிட்ட செய்தி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமருக்கு வாழ்த்து அனுப்ப அஞ்சல் துறையால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     நாமக்கல் கோட்டத்தில உள்ள அஞ்சலகங்களில் ரூ.10 செலுத்தி இ-போஸ்ட் மூலம் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம். பொதுமக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai