சுடச்சுட

  

  போலி வங்கி மோசடி: தலைமறைவான ஊழியரை கைதுசெய்ய தனிப்படை

  By நாமக்கல்,  |   Published on : 15th September 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   நாமக்கல்லில் போலி வங்கியால் ரூ.50 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றிய தற்போது தலைமறைவாக உள்ள நாமக்கல்லைச் சேர்ந்த ஊழியரைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
   தருமபுரியில் எஸ்.ஏ.பி.எஸ் என்ற பெயரில் போலி வங்கி செயல்பட்டு வந்ததாகவும், ஏராளமான பொதுமக்கள் இந்த வங்கியில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகவும் புகார் வந்தது. இதையடுத்து, அந்த வங்கியின் மேலாளர் சோமசுந்தரம், உதவி மேலாளர் நாமக்கல் மாவட்டம், களங்காணியைச் சேர்ந்த சுந்தரேசன் உள்ளிட்ட 4 பேரை தருமபுரி போலீஸார் கைது செய்தனர்.
   இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் குவிந்து தருமபுரியைப் போன்றே நாமக்கல்-சேலம் சாலையில் செயல்பட்டு வந்த எஸ்.ஏ.பி.எஸ் வங்கியில் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் தெரிவித்தனர்.
   இதையடுத்து, நாமக்கல் போலீஸார் நடத்திய விசாரணையில், நாமக்கல்-சேலம் சாலையில் எஸ்.ஏ.பி.எஸ் என்ற போலி வங்கி 6 மாதமாகச் செயல்பட்டதும், பொதுமக்கள் செலுத்திய முதலீட்டுப் பணத்தையும், வங்கியில் வேலை தருவதாகக் கூறி பலரிடமும் சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு இந்த போலி வங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.
   இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போலி வங்கியில் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி தற்போது தலைமறைவாக உள்ள நாமக்கல் முருகன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு என்பவரைப் பிடிக்க நாமக்கல் குற்றப் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
   மேலும், தருமபுரியில் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai