சுடச்சுட

  

  காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செப்.16-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ராசிபுரம் அனைத்து வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
   ராசிபுரம் அனைத்து வணிகர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.பாலாஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா வேண்டுகோளை ஏற்று, ராசிபுரம் நகரில் உணவு விடுதிகள், ஜவுளி நிறுவனங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
   இதனால் ராசிபுரம் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் செப்.16-இல் மூடப்படும் என ராசிபுரம் நகர வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். இதில் அனைத்து வர்த்தகர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai