சுடச்சுட

  

  முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் குமாரபாளையத்தில் அதிமுக, திமுகவினரால் வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
   குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன் தலைமையில் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்ற அதிமுகவினர் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரத் துணைச் செயலர் ஏஜிஎன்.திருநாவுக்கரசு, கே.ஆர்.சேகர், மகளிரணி நிர்வாகிகள் பச்சியம்மாள், விஜயலட்சுமிஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகேசன், கே.ஆர்.பாஸ்கரன், முன்னாள் உறுப்பினர்கள் சி.ஜி.அர்ச்சுனன், சி.ரவி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
   திமுக சார்பில் நகர பொறுப்பாளர் சேகர் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற திமுகவினர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தினர். நகர்மன்ற உறுப்பினர் கோ.வெங்கடேசன், ஞானசேகரன், துர்கா, காளியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   ராசிபுரத்தில்...
   ராசிபுரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
   நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பி.ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
   நகர திமுக அவைத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம், பொருளாளர் வி,நாகேஸ்வரன், துணை செயலர்கள் கே.ஆனந்தன், கே.ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   
   
   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai