சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு

    By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     உள்ளாட்சித் தேர்தலில் திமுக உறுதியாக வெற்றி பெறும் என்றார் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு.
     நாமக்கல் காவேரி நகரில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் சி.மணிமாறன் வரவேற்றார்.
     முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசியது: சட்டப்பேரவைத் தேர்தலில் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால் திமுக ஆட்சியமைத்திருக்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்று காலையில் திமுக 110 இடங்களில் முன்னிலை வகித்தது. இச்சூழலில் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்த பின், அதிமுக முன்னிலை வகித்ததாக அறிவிக்கப்பட்டது.
     கடந்த 1986-ஆம் ஆண்டு திமுக எதிர்கட்சியாக இருந்தபோதிலும், உள்ளாட்சித் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களைக் கைப்பற்றியது. அதுபோல் பேரூராட்சி, நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதேநிலைதான் தற்போதும் வரும். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு உறுதியாக வெற்றி அமையும்.
     உள்ளாட்சித் தேர்தல் எப்போதுமே நமக்கு நம்பிக்கையாக அமையும். மக்கள் திமுக வரவேண்டுமென்ற மன நிலையில் உள்ளனர். அதனால் அதிகாரிகளும் நிச்சயம் தவறு செய்ய மாட்டார்கள். காவல் துறையினரும் அதே மனநிலையில் தான் உள்ளனர் என்றார்.
     பரமத்தி வேலுôர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே. எஸ்.மூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai