சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வு நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கியது.
     நாமக்கல் நகர பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனுவை மாநில மகளிரணி செயலாளர் ரோகிணி வழங்கினார்.
     இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் என்.பி.சத்யமூர்த்தி, செயலர் காந்தி, நகரத்தலைவர் வரதராஜ், மகளிரணி மாவட்ட துணை பொதுச்செயலர் ஹேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதேபோல், பரமத்தி, பெரியமணலியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 16-ஆம் தேதி திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், குமாரபாளையம், பள்ளிபாளையத்திலும், 18-ஆம் தேதி வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் பாஜக மாவட்டப பொறுப்பாளர்கள், கட்சியினரிடம் விருப்ப மனு பெற உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai