சுடச்சுட

    

    ஊரகப் பகுதிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நிறைவு

    By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைப் பொறுத்த வரையில் 17 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 172 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 322 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,595 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,106 பதவி இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதையொட்டி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
     இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 451 ஆண்கள், 4 லட்சத்து 22 ஆயிரத்து 474 பெண்கள், 22 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 31 ஆயிரத்து 947 வாக்காளர்கள் உள்ளனர்.
     நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றியம் வாரியாக வாக்காளர்கள் விவரம்:
     எலச்சிபாளையம் 62,723, எருமப்பட்டி 75,235, கபிலர்மலை 47,083, கொல்லிமலை 30,937, மல்லசமுத்திரம் 40,144, மோகனூர் 66,053, நாமகிரிப்பேட்டை 56,290, நாமக்கல் 47,346, பள்ளிபாளையம் 99,605, பரமத்தி 35,870, புதுச்சத்திரம் 63,961, ராசிபுரம் 44,848, சேந்தமங்கலம் 40,456, திருச்செங்கோடு 73,504, வெண்ணந்தூர் 47,892 வக்காளர்கள் உள்ளனர். இதில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது என்றனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai