சுடச்சுட

    

    கடையடைப்புக்கு கோழிப்பண்ணையாளர்கள்,லாரி உள்பட 16 சங்கங்கள் ஆதரவு

    By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு லாரிகள், கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிட்ட 16 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.
     நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில், கோழிப்பண்ணையாளர்கள், டயர் டீலர், லாரி கூண்டு கட்டும் சங்கம் உள்ளிட்ட 16 சங்கங்களின் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி தலைமை வகித்தார். இதில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
     கூட்டத்தில், வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் பழனியப்பன், லாரி புக்கிங் ஏஜென்ட் சங்கத் தலைவர் பாலசந்திரன், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி, லாரி சங்கச் செயலர் அருள், பொருளாளர் சீரங்கன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai