சுடச்சுட

  

  கோ-ஆப்டெக்ஸில் ரூ.80 லட்சத்துக்கு தீபாவளி விற்பனை இலக்கு: ஆட்சியர்

  By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.80 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
   நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோ ஆப்டெக்ஸ் சேலம் மண்டல மேலாளர் சு.சண்முகம் தலைமை வகித்தார். கோ ஆப்டெக்ஸ் இயக்குநர் சி.கலைவாணி முன்னிலை வகித்தார். விற்பனைப் பொறுப்பாளர் பி. செல்வாம்பாள் வரவேற்றார்.
   மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் விற்பனையைத் தொடக்கி வைத்துப் பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.30 லட்சம், திருச்செங்கோடு விற்பனை நிலையத்திற்கு ரூ.80 லட்சம், நாமக்கல் விற்பனை நிலையத்திற்கு ரூ.80 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
   தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு தங்கமழை திட்டத்தில் ரூ.2,000 மதிப்புள்ள துணி ரகம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்பட்டு 5 நபர்களுக்கு முதல் பரிசாக தலா 8 கிராம் தங்கம், 15 நபர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது.
   தீபாவளி சிறப்பு விற்பனை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என கோ ஆப்டெக்ஸ் விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர். கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai