சுடச்சுட

  

  சேதப்படுத்தப்பட்ட லாரிகளுக்கு கர்நாடக அரசு நஷ்ட ஈடு வழங்கக் கோரிக்கை: இன்று 1 லட்சம் மணல் லாரிகள் ஓடாது

  By நாமக்கல்,  |   Published on : 16th September 2016 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட லாரிகள் மற்றும் வாகனங்களுக்கு அந்த மாநில அரசு நஷ்ட ஈடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் 1 லட்சம் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
   தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் செல்ல. ராசாமணி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட லாரிகள், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
   பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு கர்நாடக மாநில அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், சம்மேளனத்தின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
   இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப்.16) தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை ஓட்டாமல் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai