Enable Javscript for better performance
நாமக்கல்லில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கர்நாடக, தமிழக அரசுகள் நடவடிக்கையெடுக்கக் கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
     நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     தமிழர்களின் அடிப்படை உரிமையான காவிரி நீரை உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கு திமுக தலைமைக்கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும்.
     கர்நாடக மாநிலத்தில் நடந்த போராட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதோடு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
     தமிழர்களின் மீது பற்றில்லாத தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் போக்கைக் கண்டித்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
     இதில் அனைத்து விவசாய சங்கங்கள் உள்பட சமூக அமைப்புகள் கலந்து கொள்ளவேண்டும். ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai