சுடச்சுட

    

    பரமத்தி அருகே இறந்து கிடந்த புள்ளிமான்: வனத்துறையினர் விசாரணை

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 16th September 2016 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், ஓவியம்பாளையம் அருகே கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை மீட்டு நாமக்கல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     ஓவியம்பாளையம் அருகே கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாமக்கல் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த வன அலுவலர் கனகரத்தினம் தலைமையில் வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க 40 கிலோ எடைகொண்ட புள்ளி மானின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
     பரமத்தி அருகே சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இடும்பன் குளம் உள்ளது. இக்குளத்தில் 20-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் இருப்பதாகவும்,தண்ணீர் இல்லாத காரணத்தால் புள்ளி மான்கள் தண்ணீரைத் தேடி அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வருவதாகவும் நாய்கள் துரத்துவதால் இது போன்ற விபத்துகளில் சிக்கி வருவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே புள்ளி மான்களைக் காக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai