Enable Javscript for better performance
பரமத்தி வேலூர் கொப்பரை தேங்காயின் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் கொப்பரை தேங்காயின் விலை உயர்வு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 16th September 2016 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் கொப்பரையின் விலை உயர்ந்துள்ளது.

     பரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டு உள்ளது.
     வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலி கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுப்பதற்கு திருச்செங்கோடு, ஈரோடு, சிவகிரி, கொடுமுடி, வெள்ளகோவில் பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.
     கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 706 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.55.96-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.51.89-க்கும் சராசரியாக கிலோ ஒன்று ரூ.53.19-க்கும் ஏலம் போனது.
     வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 761 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.59.59-க்கும் குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.56.79-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.59.19-க்கும் ஏலம் போனது.
     கொப்பரைத் தேங்காயின் வரத்து சிறிதளவு உயர்ந்திருந்தாலும், வியாபாரிகளின் வரத்து அதிகரித்திருந்ததால் கொப்பரை தேங்காய்களின் விலை உயர்ந்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai