சுடச்சுட

    

    ஆற்றில் குளிக்கச் சென்றவரின் பணம் திருட்டு: 3 பேர் கைது

    By பரமத்திவேலூர்,  |   Published on : 17th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபரின் செல்லிடப்பேசி, பணம், உடைமைகளைத் திருடியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     கரூர் மாவட்டம், திருமாநிலையூரைச் சேர்ந்தவர் புக்கராண்டி (43). இவர், அரசுப் பேருந்தில் நடத்துநராக உள்ளார்.
     இவர், வேலூர் காவிரியாற்றுக்கு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது கரையில் அவர் வைத்திருந்த செல்லிடப்பேசி, ரூ. 500 சிலர் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக வேலூரைச் சேர்ந்த பூபாலன் (22), ராஜேஷ் (25), சிவா (23) ஆகியோரைக் கைது செய்தனர். பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai