சுடச்சுட

  

  இரு குடிசைகள் எரிந்து சாம்பல்: ரூ. 3 லட்சம் மதிப்பு பொருள்கள் நாசம்

  By பரமத்திவேலூர்,  |   Published on : 17th September 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நன்செய் இடையாறில் மின் கசிவால் இரண்டு குடிசை வீடுகளில் தீப்பிடித்தில் வீடுகளில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சாம்பலாகின.
   நன்செய் இடையாறைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பக்கத்து குடிசையில் வசிப்பவர் அலமேலு. இரு குடும்பத்தாரும் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.
   அப்போது இரு குடிசைகளிலும் அடுத்தடுத்து தீப்பற்றியது.
   இதனால் இரு குடும்பத்தாரும் வெளியேறி சப்தமிட்டனர். அக்கம்பக்கத்தார் குடிசையில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.
   இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் தீ பரவி இரு குடிசைளும் சாம்பலாகின.
   இதில் அலமேலுவின் வீட்டிலிருந்த ரூ. 20 ஆயிரம் பணம், 2 பவுன் நகையும், செந்தில் வீட்டிலிருந்த ரூ.15 ஆயிரம் பணம் தங்கத்தோடு மற்றும் வீட்டு சமையல் பொருள்கள், துணிகள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.
   தகவல் அறிந்ததும் பரமத்திவேலூர் வட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சங்கர், அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
   தேவையான உதவிகளை இரு குடும்பத்தாருக்கும் செய்து தருவதாகத் தெரிவித்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai