சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

  By நாமக்கல்  |   Published on : 17th September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
   தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.
   நாமக்கல்லில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருப்ப மனு விநியோகம் செய்யும் நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான பி.தங்கமணி தொடக்கி வைத்தார்.
   இதில், நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், கட்சியின் அமைப்புச்செயலர் சேவல் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   விருப்ப மனுக்களை வரும் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai