சுடச்சுட

  

  கோழிகள் நீர் அருந்தும் அளவைக் கண்காணிக்க அறிவுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 17th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதால் கோழிகள் நீர் அருந்தும் அளவில் ஏதேனும் குறைகள் உள்ளனவா? என்பதைக் கவனிக்குமாறு கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு குறைவு. செப்டம்பர் மாதம் இரண்டாம் கோடைக்காலம் என அழைப்பதற்கு ஏற்ப சற்றே தீவன எடுப்பு குறைந்தே காணப்படும்.
   கோழிகள் நீர் அருந்தும் அளவில் ஏதேனும் குறைகள் உள்ளனவா? எனக் கூர்ந்து கவனித்து வரவேண்டும். கோழியின நோய்க் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய், ஈகோலை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
   இதனால் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனம், தண்ணீரில் ஈகோலை கிருமியின் தாக்கம் உள்ளதா? என்பதை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
   மேல்மூச்சுக்குழாய் நோயைத் தடுக்க தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai