சுடச்சுட

    

    சூதாடிய 14 பேர் கைது: ரூ.3.32 லட்சம் பறிமுதல்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 17th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை பரமத்தி போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 3.32 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
     பரமத்தி அருகே மாதேசம்பாளையம், காளியப்பன் வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு தகவல் கிடைத்தது.
     அதன்பேரில் அவர் அங்குசென்று சோதனையிட்டதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மரவாபாளையத்தைச் சேர்ந்த கோபி (28), பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (42), வேலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (44), சரவணன் (28), விவேகானந்தன் (26), பொத்தனூரைச் சேர்ந்த அசோகன் (35) உள்பட 14 பேரைக் கைது செய்தனர்.
     அவர்களிடமிருந்து ரூ. 3. 32 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai