சுடச்சுட

    

    செப். 19-இல் உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: திமுக அறிவிப்பு

    By நாமக்கல்  |   Published on : 17th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விண்ணப்பப் படிவத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:
     உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், வேட்புமனு விண்ணப்பப் படிவங்களுக்கு ரூ. 10 செலுத்தி போட்டியிட விரும்பும் பொறுப்பு, முழு விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். அதற்குரிய விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கப்படும்.
     நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.4,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.1,000, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.10,000, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரூ.2,000 என கட்டணத்துடன் விண்ணப்ப படிவத்தை வரும் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
     ஆதிதிராவிடர், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் போட்டியிடுவோர் கட்டணத்தில் பாதித் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai