சுடச்சுட

    

    சேலத்தில் கூலித் தொழிலாளியின் ஒரு வயது பெண் குழந்தை மர்மக் காய்ச்சலுக்கு பலியானது.
     சேலம் மாநகராட்சி 45- ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட பஞ்சதாங்கி ஏரிப் பகுதியில் நரிக்குறவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
     இந்தப் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி தர்மன் மற்றும் விமலா தம்பதியின் 1 வயது பெண் குழந்தை திவ்யாஸ்ரீ, கடந்த 15 தினங்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது.
     சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
     இந்தநிலையில், காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் குழந்தையை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தீவிர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லுமாறு சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
     இதையடுத்து, குழந்தையை சென்னைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென குழந்தை இறந்தது.
     மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மர்மக் காய்ச்சல் காரணமாக குழந்தை இறந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
     இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்போ அல்லது மர்மக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களோ யாரும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai