சுடச்சுட

  

  ரயில் மறியல் போராட்டம்: திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 450 பேர் கைது

  By நாமக்கல்,  |   Published on : 17th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 450 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பகுதியாக நாமக்கல்லில் விடுதலை களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமையில் 4 பேர் நாமக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
   அதேபோல் திமுக துணைப் பொதுச்செயலர் வி.பி.துரைசாமி தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் பரமத்தி வேலூர் தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி, மாநில மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன் உள்பட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலர் மணிமாறன் உள்ளிட்ட 65 பேர், மதிமுக மாவட்டச் செயலர் குருசாமி தலைமையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
   திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அமைப்பினர் மேற்கு ரத வீதியில் உள்ள விஜயா வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   அக்கட்சியைச் சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
   போராட்டத்தை முன்னிட்டு நாமக்கல் ரயில் நிலையம் பகுதியில் ஏ.டி.எஸ்.பி.செந்தில் தலைமையில், 5 டி.எஸ்.பி-க்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் என 220 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai