சுடச்சுட

  

  ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் தேவை

  By DIN  |   Published on : 18th September 2016 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதோடு பள்ளி, கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு மண்டலத்துக்கான இளம்பெண்கள் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பா.லெனின் தொடக்கி வைத்தார். முன்னதாக, பள்ளிபாளையம் பிரிவில் பெரியாரின் படத்துக்கு உடுமலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா மாலை அணிவித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இளம்பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
  மாநாட்டு கொடியை மாநிலக்குழு உறுப்பினர் கே.எஸ்.பாரதி ஏற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சுகன்யா வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எல்.மேகலா, எழுத்தாளர் பிரேமா ரேவதி, மாநிலத் தலைவர் எம்.செந்தில், செயலர் எஸ்.பாலா, பொருளாளர் தீபா ஆகியோர் பேசினர்.
  ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். ஒருதலைக் காதலால் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காதல் கொலைகளைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம், பள்ளி, கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். நூற்பாலை, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மாநிலத் துணைத் தலைவர் பிரவீன் குமார், மாநிலத் துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் ஆர்.ரவி, செயலாளர் இ.கோவிந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கற்பகம், பி.ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai