சுடச்சுட

    

    சுதந்திரப் போராட்ட தியாகிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 18th September 2016 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திரப் போராட்ட தியாகிகள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார்.
    நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளின் கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    கூட்டத்தில் ஏற்கெனவே, பெறப்பட்ட 20 கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இந்த மனுக்களில் தகுதியான 10 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும், தகுதியற்றவைகளாகக் கருதப்பட்ட 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும், மீதமுள்ள 3 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது எனத் தெரிவித்தார்.
    கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 14 மனுக்கள் வரப்பெற்றன. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.பாலசந்திரன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai