Enable Javscript for better performance
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 18th September 2016 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு 2,600 அடி உயரத்தில் உள்ள சுவாமியை 3,360 படிக்கட்டுகள் ஏறிச்சென்று வழிபட்டனர்.
    மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோயிலில் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி புஷ்பங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்த மாலை 6 மணிக்கு கருட சேவையும், திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
    சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
    வளையப்பட்டி ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில், பாண்டமங்கலம் ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில், ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் என மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai