சுடச்சுட

  

  வருங்கால வைப்பு நிதி பிடித்தம்: புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 18th September 2016 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட அனைத்துப் பணியாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் தமிழரசு தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் பேபிபிரிஸ்கில்லா முன்னிலை வகித்தார். நிர்வாகி பி.ஜெயக்குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத், செயலர் முருகேசன் ஆகியோர் பேசினர்.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநிலம் முழுவதும் 2011-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணியாளர்கள் 250 பேருக்கு இதுவரை பணி மதிப்பீட்டுக்கான பணப் பலன் வழங்கப்படவில்லை. இந்தப் பணப் பலனை உடனடியாக வழங்க வேண்டும்.
  2013-14, 2014-15 பணி மதிப்பீடு முடிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பணி மதிப்பீடு முடிக்கப்படாத மாவட்டங்களுக்கு பணி மதிப்பீடு முடித்து அதற்கான பணப் பலனை உடனே வழங்க வேண்டும்.
  பணியாளர்களுக்கு இதுவரை பிடிக்கப்படாத வருங்கால வைப்பு நிதி உடனடியாக பிடித்தம் செய்ய வேண்டும். பிஎல்எப் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை திருப்பத்தைக் காரணம் காட்டி 10 ஆண்டுகளாக மாறுபட்ட இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மீது மாவட்ட திட்ட மேலாளர்கள் பணி நிறுத்தம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
  இதுபோன்ற அச்சுறுத்தும் நடவடிக்கையால் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த நடவடிக்கைகளைத் தளர்த்தி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai