சுடச்சுட

  

  ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

  By DIN  |   Published on : 19th September 2016 04:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறப்படும் இத்தலத்தில் நிகழாண்டு புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதைத்தொடர்ந்து ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. மேலும் இரவு 7 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல, லட்சுமி நாராயணப் பெருமாள், பரமத்தி கோதண்டராம சுவாமி, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai